மாவட்ட செய்திகள்

குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து கல்லணையில் கொதிக்கும் மணலில் உருண்டு விவசாயிகள் போராட்டம் + "||" + Farmers struggle to roll in the boiling sand in the stone to denounce the water to the drip

குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து கல்லணையில் கொதிக்கும் மணலில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து கல்லணையில் கொதிக்கும் மணலில் உருண்டு விவசாயிகள் போராட்டம்
குறுவைக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கல்லணையில் கொதிக்கும் மணலில் உருண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கலெக்டர் காலில் விழுந்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இந்த ஆண்டும் திறக்கப்படவில்லை.


குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வராததால் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கம், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம், நமது மக்கள் கட்சி விவசாய பிரிவு ஆகிய விவசாய அமைப்புகள் சார்பில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி விதை விதைக்கும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். நமது மக்கள் கட்சி மாநில விவசாய பிரிவு தலைவர் குணசேகரன், காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்க பொது செயலாளர் பொன்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கல்லணையில் திரண்ட விவசாயிகள் காவிரியில் இறங்கி நெல்விதைகளை தூவி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர்.

அப்போது திடீரென விவசாயிகள் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கோடை வெயிலில் கொதிக்கும் மணலில் படுத்து உருண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அருகே உள்ள தோகூர் கிராமத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வந்திருப்பதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தோகூர் கிராமத்துக்கு சென்றனர்.

அங்கு குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட கலெக்டர் அண்ணாதுரை காலில் விழுந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என முறையிட்டனர்.

குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான மக்கள் முன்பு கலெக்டர் காலில் விவசாயிகள் விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் தோகூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்
விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் பள்ளி மாணவர்கள் நாற்று நட்டனர்.
3. கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
4. சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்
5. பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...