ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிய கும்பல் செல்போன் தர மறுத்ததால் ஆத்திரம்


ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிய கும்பல் செல்போன் தர மறுத்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் தர மறுத்த ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் விநாயகம் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இம்ரான்கான், இமாம் அலி, உள்பட 5 பேர் விநாயகத்திடம் சென்று சிறிது நேரம் செல்போன் கொடு பேசிவிட்டு தருகிறோம் என்று கேட்டுள்ளனர். ஆனால் விநாயகம் செல்போன் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இம்ரான்கான், இமாம் அலி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோ டிரைவர் விநாயகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் விநாயகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விநாயகத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story