மாவட்ட செய்திகள்

முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு + "||" + The petitioner requested the District Development Officer to provide proper water supply

முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு
கிராம மக்கள் ஒன்று திரண்டு அடம்பூர் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் ஒன்றியம் பேயாடி கோட்டை கிராமத்திற்கு, அடம்பூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தான் தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால், பேயாடி கோட்டை கிராமத்திற்கு 10 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது. அதுவும் போதிய அளவு கிடைப்பதில்லை. வீட்டுக்கு ஒரு குடம் தான் கிடைக்கிறது. இதனால், கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையி்ல் கிராம மக்கள் ஒன்று திரண்டு அடம்பூர் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.