மாவட்ட செய்திகள்

கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு, விவசாயிகளை கைது செய்ய கூடாது - போலீஸ் சூப்பிரண்டிடம் மனு + "||" + kall downloads Put a false case, Farmers arrested Should not do

கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு, விவசாயிகளை கைது செய்ய கூடாது - போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு, விவசாயிகளை கைது செய்ய கூடாது - போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு விவசாயிகளை கைது செய்யக் கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை,

நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் விவசாயிகள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்றுக்காலை வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள்ளுக்கு அனுமதி கேட்டு தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு முன்பு தென்னை மரத்தில் இருந்து நீராபானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. நீராபானம் என்பதும், கள் என்பதும் ஒரே மரத்தில் ஒரே பாளையில் ஒரே தன்மையில் எடுக்கக் கூடியது.

நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க விவசாயத்துறை அதிகாரிகள் எங்களுக்கு எந்த வித பயிற்சியும் அளிக்க வில்லை. நீராபானம் இறக்கிய பிறகு அது கள்ளாக மாறுவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. அரசை எதிர்த்தோ, போலீசாரை எதிர்த்தோ நாங்கள் செயல்படவில்லை.

கேரளாவில் கள், நீராபானத்துக்கு அனுமதி அளித்தது போல தமிழக விவசாயிகளுக்கும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். கள்ளுக்கும், நீராபானத்துக்கும் என்ன வித்தியாசம் என்று விவசாயத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். கள் வைத்திருந்ததாக கூறி விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போது அதை ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் முடிவை வெளியிட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு கூட பொள்ளாச்சி ஆழியாறில் 7 விவசாயிகள் மீதும், பொள்ளாச்சி கோட்டூர் போலீஸ் நிலையத்தில் 7 பேர் மீதும், ஆனைமலை போலீஸ் நிலையத்தில் 3 பேர் மீதும், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒருவர், சிறுமுகை போலீஸ் நிலையத்தில் 5 பேர் மீதும், மேட்டுப்பாளையத்தில் 2 விவசாயிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே கள் இறக்குவதாக விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், கைது செய்வதையும் போலீசார் கைவிட வேண்டும். எனவே தமிழக விவசாயிகள் அனைவரும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
2. தரமான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
தரமான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக வீராணம் ஏரியை 11-ந் தேதிக்குள் திறக்க நடவடிக்கை
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக 11-ந் தேதிக்குள் வீராணம் ஏரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரி கூறினார்.
4. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும்: குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும் என்று நெல்லையில் நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
5. மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.