குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விருதுநகர்,
மாவட்ட பள்ளி கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அமிர்தா தொண்டு நிறுவனம் மற்றும் விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரி ஆகியவற்றின் சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை யொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் விருதுநகரில் நடைபெற்றது.
ஊர்வலம் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைந்தது. மேலும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் கலாராணி, அமிர்தா தொண்டு நிறுவனம் உமையலிங்கம், ஸ்ரீவித்யா கல்லூரி துணை முதல்வர் பசுபதி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல திருச்சுழியில் ஆர்.சி.பி.டி.எஸ். தன்னார்வ நிறுவனம் மற்றும் டி.யூ.என்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளியில் தொடங்கி மெயின் பஜார், அருப்புக்கோட்டை சாலை, நடுப்பஜார், மதுரை சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
Related Tags :
Next Story