மாவட்ட செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம் + "||" + Fishing fishermen completed fishing fishermen preparing to go to sea

மீன்பிடி தடைக்காலம் நிறைவு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற உள்ளதையொட்டி தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ஏரிப்புறகரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தியது. தற்போது மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தி உள்ளது. இந்த காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள்.


தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியும். நாட்டுப்படகு மீனவர்கள் பிற நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவு ெபறுகிறது.

இதையொட்டி தஞ்சை மாவட்ட மீனவர்கள் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தங்கள் படகுகளில் ஐஸ்பெட்டி, மீன்பிடிவலை மற்றும் மீன்பிடி கருவிகளை ஏற்றி கடலுக்கு செல்ல அயத்தமாகி வருகிறார்கள்.

கஜா புயலில் 188-க்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் படகுகளை தயார் செய்ய முடியவில்லை. இதனால் 150-க்கும் குறைவான விசைப்படகு மீனவர்கள் வழக்கமாக கடலுக்கு செல்லக்கூடிய சனிக்கிழமை கடலுக்கு செல்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மார்த்தாண்டன்துறையில் பரபரப்பு கடல் சீற்றம்; கலையரங்கம் சேதம் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மார்த்தாண்டன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கலையரங்கம் இடிந்து சேதமடைந்தது. மீனவ கிராமங்களை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சுருக்கு வலை பிரச்சினையில் நல்ல முடிவினை எடுக்கவேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மீனவர் பேரவை வேண்டுகோள்
சுருக்கு வலை பிரச்சினையில் நல்ல முடிவினை எடுக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மீனவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. கடலில் மீன்பிடிக்கச்சென்றபோது காசிமேடு மீனவர்களை தேடும் பணி தீவிரம்; கப்பலில் ஏறி உயிர் தப்பினரா? அதிகாரி பேட்டி
கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றபோது மாயமான காசிமேடு மீனவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. கப்பலில் ஏறி மீனவர்கள் உயிர் தப்பினரா? என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
4. சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இழப்பீடு; அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
சுருக்கு வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
5. மீனவர்களுக்கு கடற்சிப்பந்திகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு
மீனவர்களுக்கு, கடற்சிப்பந்திகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக்லால் மாண்டவியா அறிவித்துள்ளார்.