மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு + "||" + Expansion of Rs 6,000 per annum in Erode district Farmers can apply to the collector's notice

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
ஈரோடு,

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம் கடந்த 24-2-2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.


தற்போது இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நடுத்தர மற்றும் விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் ஆகிய விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேரலாம். எனவே விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பங்கள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாரிடு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்த திட்டத்தில் சேரலாம்.

இறந்து போன தாய் அல்லது தந்தையின் பெயரில் நிலம் இருந்தால், அதற்கு உரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதி தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ந் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டா மாறுதல்களுக்கு வருகிற 18-ந் தேதிவரை தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முகாம்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு
மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
2. அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.
3. திருமருகல், சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
திருமருகலில் உள்ள சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
4. கருப்பு கவுனி அரிசியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட 5 உணவு பொருட்கள் கலெக்டர் அறிமுகப்படுத்தினார்
இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் கருப்பு கவுனி அரிசியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட 5 உணவு பொருட்களை கலெக்டர் அண்ணாதுரை அறிமுகப்படுத்தினார்.
5. இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் ஜவாஹிருல்லா அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை