முகிலனை கண்டுபிடிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் வாள்சண்டை வீரர் கைது
திருவட்டார் அருகே உள்ள தோட்டவாரம் ஏருக்கலாம்விளையை சேர்ந்தவர் டேவிட்ராஜ். வாள்சண்டை வீரரான இவர், நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார்.
நாகர்கோவில்,
திருவட்டார் அருகே உள்ள தோட்டவாரம் ஏருக்கலாம்விளையை சேர்ந்தவர் டேவிட்ராஜ். வாள்சண்டை வீரரான இவர், நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “சமூக ஆர்வலர் முகிலன் மாயமாகி 120 நாட்கள் கடந்த நிலையிலும் அவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. எனவே முகிலனை உடனே கண்டுபிடித்து தரவேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மனு அளித்துவிட்டு டேவிட்ராஜ் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டேவிட்ராஜ் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story