செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்; பயணிகள் அவதி
செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 8.50 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை என இருமார்க்கத்திலும் வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதாவது காலை 9.50 மணிக்கு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனையடுத்து மின்சாரரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
மின்சார ரெயில் சேவை பாதிப்பால் காலையில் வேலைக்கு சென்றோரும், பள்ளி–கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகளும் கடும் அவதி அடைந்தனர். சிலர் ரெயிலில் இருந்து இறங்கி ஷேர் ஆட்டோக்கள் மூலமாக அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.
மேலும் சிலர் பஸ்கள் மூலமாக சென்றனர். இதனால் மாநகர பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.