இந்து முன்னணியினர் சாலை மறியல்; 16 பேர் கைது


இந்து முன்னணியினர் சாலை மறியல்; 16 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் அந்த அமைப்பினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தஞ்சாவூரில் விநாயகர் கோவில் கட்ட கோர்ட்டு உத்தரவிட்டும், மற்றொரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்து இந்து முன்னணியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியனை தஞ்சை எல்லையிலேயே போலீசார் கைது செய்தனர். அதனை கண்டித்தும், தஞ்சையில் விநாயகர் கோவில் கட்ட கோர்ட்டு உத்தரவிட்டும், மற்றொரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் அந்த அமைப்பினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியனை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இந்து முன்னணி நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story