மாவட்ட செய்திகள்

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் + "||" + Constant power cut Public Struggle in Electric Office

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்
தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விடிய விடிய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

கத்திரி வெயில் முடிந்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெப்ப காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தினமும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11.30 மணி ஆகியும் மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மின்வாரிய ஊழியர்களிடம், தினமும் இரவு நேரத்தில் மின்சாரம் தொடர்ந்து தடை செய்யப்பட்டு, அதிகாலையில் தான் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் எந்த வித தடையும் இன்றி மின்வினியோகம் செய்யப்படுவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

ஆனால் பொதுமக்களின் கேள்விக்கு அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மடிப்பாக்கம் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பொதுமக்கள், ‘‘ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தினமும் இரவு–பகலாக தண்ணீருக்கு அலைந்து வருகிறோம். இரவில் வீட்டுக்கு வந்தால் மின்சார தடையால் குழந்தைகள் உள்பட யாரும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். காரணம் கேட்டால் மின்வாரிய ஊழியர்கள் சரியான பதில் சொல்வதில்லை. எங்கள் பகுதிக்கு மின்சாரம் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று கூறி விடிய விடிய மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதிகாலை 4 மணிக்கு மின்சார வினியோகம் சீரானது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய அளவில் விரைவில் போராட்டம்
தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய அளவில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.
2. போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்: மதுவுக்கு எதிராக வேலூர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் - மதுரை வக்கீல் நந்தினி பேட்டி
‘‘நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் மதுவுக்கு எதிராக வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். எனது போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்’’ என்று மதுரை வக்கீல் நந்தினி கூறினார்.
3. காங்கேயம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: ஓட்டலுக்குள் புகுந்து மதுபாட்டில்களை அள்ளிய பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
காங்கேயம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஓட்டலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை அள்ளினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
4. செங்கல்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. லாரியில் ஏற்றிச்சென்ற ராட்சத உருளை ரோட்டில் உருண்டு விழுந்தது; பொதுமக்கள் சாலை மறியல்
ராட்சத லாரியில் ஏற்றிச்சென்ற 122 டன் எடையுள்ள இரும்பு உருளை, ரோட்டில் உருண்டு விழுந்து, சாலையோரம் உள்ள வீடுகளின் அருகே கிடந்ததால் லாரி கண்ணாடியை உடைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.