வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி; ஒருவர் கைது


வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி; ஒருவர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2019 5:00 AM IST (Updated: 22 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு இடையன்காட்டுவலசு ஆண்டவர் வீதி பகுதியை சேர்ந்தவர் அம்பலவாணன் (வயது 60). இவர் தனது நண்பர்களான இளங்கோ மற்றும் கிருஷ்ணமூர்த்தியுடன் ஐரோப்பா கண்டங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டார்.

இதை அறிந்து கொண்ட ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த நந்தகுமார், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த ஜமால், கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த நீஜிஷ் சேவியர் ஆகியோர் அம்பலவாணனை அணுகி உள்ளனர்.

அப்போது அவர்கள் அம்பலவாணனிடம் `நாங்கள் பல ஆண்டுகளாக கோவை சரவணம்பட்டி பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருவதாகவும், உங்களை வெளிநாடுகளுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை’ கூறி உள்ளனர்.

இதை நம்பிய அம்பலவாணன் உள்பட 40 பேர் தலா ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் ரூ.78 லட்சத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளனர். அதன்பின்னர் நந்தகுமார், ஜமால், நீஜிஷ் சேவியர் ஆகியோர் கூறியபடி, சுற்றுலா அழைத்து செல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் அம்பலவாணன் உள்பட 40 பேரும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அவர்கள் டிராவல்ஸ் வைத்து நடத்தவில்லை என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடாந்து அம்பலவாணன் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, `ஜமாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நந்தகுமார் மற்றும் நீஜிஷ் சேவியர் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story