மாவட்ட செய்திகள்

தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது + "||" + Rs.34½ lakh fraud from businessman's savings account Bank manager arrested

தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது

தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது
தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, தொழிலதிபர். இவர் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது மனைவியுடன் சேர்ந்து சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2011 முதல் 2013 வரை உள்ள காலங்களில் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து 34½ லட்சம் ரூபாய் காசோலை மூலமாகவும், பணம் எடுக்கும் செல்லான் மூலமாகவும் போலியாக கையெழுத்திட்டு எடுக்கப்பட்டு இருந்தது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது அவர்களுக்கு தெரியவந்தது.

எனவே அவர்கள் இது தொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், சம்பவம் நடைபெற்ற காலத்தில் வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்த பாலசுப்ரமணியன் (52) தங்களது பணத்தை மோடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்பேரில் பெரியகடை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குருமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. மேலும் பாலசுப்ரமணியன் தற்போது சென்னையில் உள்ள வங்கியில் வேலை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்னை சென்று பாலசுப்ரமணியனை கைது செய்து புதுவை கொண்டு வந்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த வாலிபர் கடத்தல்; 2 பேர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த வாலிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி போலி விசா தயாரித்து மோசடி செய்த 3 பேர் கைது
வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி போலி விசா தயாரித்து மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. 5 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததன் எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்ததன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
4. ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
5. ஆந்திராவில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 43 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் 43 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.