முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் தகுதியுடைய இளைஞர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரூர்,
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது 2019 ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அந்த வகையில் இந்தாண்டும் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் சுதந்திரதின விழாவில் அந்த விருது வழங்கப்பட இருக்கிறது.
தகுதிகள்
இந்த விருது பெறுவோர் 15 வயது முதல் 35 வயது வரையுள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 2018 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
ஜூலை 2-ந்தேதி கடைசிநாள்
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். எனவே கரூர் மாவட்டத்தில் தகுதியுடைய நபர்கள் இந்த விருதினை பெற www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 2-ந்தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story