புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 3:45 AM IST (Updated: 23 Jun 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் புதிய ரெயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

இதில் மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகவான்ராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகம், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் சவுந்தரராஜன், தியாகராஜன், ராமசாமி, வெங்கடேசன், சுர்ஜித், அரசு தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story