செங்கல்பட்டில் மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; ஆவணங்கள் நாசம்


செங்கல்பட்டில் மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; ஆவணங்கள் நாசம்
x
தினத்தந்தி 24 Jun 2019 3:33 AM IST (Updated: 24 Jun 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் எதிரே தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த அலுவலகம் வண்டலூர், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், படப்பை உள்ளிட்ட மின்சார வாரிய அலுவலகங்களின் தலைமை அலுவலகமாகும்.

இந்த அலுவலகத்தில் உள்ள ஊரக கோட்ட மின்உதவி பொறியாளர் சுந்தரராஜ் என்பவரது அறையில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் திடீரென புகைமூட்டத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லை. உடனே அங்கிருந்த காவலாளி உள்ளே சென்று பார்த்தார்.

அதற்குள் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. உடனே பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் துணையுடன் தீயை அணைக்க காவலாளி முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவியது.

உடனே இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story