கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு


கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:15 AM IST (Updated: 25 Jun 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் வேலுமணி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிப்பதற்காக நேற்று திரளானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ராசேந்திரன் தலைமையில் வெள்ளப்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள 282 குடும்பங்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணமானது, இதுவரை வழங்கப்படவில்லை. எனவே வெள்ளப்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட உரிய நிவாரணத்தை உடனே வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் அப்பு, ஒன்றிய செயலாளர் விஜயானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story