திருச்சி கோட்டத்தில் இன்றும், 27-ந்தேதியும் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி கோட்டத்தில் ரெயில் சேவையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), 27-ந் தேதியும் (வியாழக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பணிகளின் காரணமாக ரெயில் சேவை இன்றும் (செவ்வாய்க்கிழமை), 27-ந் தேதியும் (வியாழக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ரெயில் சேவையின் மாற்றம் விவரம் வருமாறு:-
*திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16796) விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.
*திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் (76854) காரைக்காலுக்கு 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
*திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) செல்லும் வழியில் 20 நிமிடங்கள் தாமதமாகும்.
*திருப்பாதிரிபுலியூர்-திருச்சி பயணிகள் ரெயில் (76841) வரும் வழியில் 20 நிமிடங்கள் தாமதமாகும்.
*சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) திருச்சிக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.
*குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) விழுப்புரத்திற்கு 20 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
*திருச்சி-திருப்பாதிரிபுலியூர் பயணிகள் ரெயில் (76842) செல்லும் வழியில் 20 நிமிடங்கள் தாமதமாகும்.
*பிக்கானர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (22632) திருச்சிக்கு ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக வந்து புறப்படும்.
ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்
27-ந் தேதி ரெயில் சேவையின் மாற்றம் விவரம் வருமாறு:-
*திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்திற்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.
*திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் வழித்தடத்தில் 30 நிமிடங்கள் தாமதமாகும்.
*கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12084) வருகிற வழியில் 30 நிமிடங்கள் தாமதமாகும்.
*திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் வழியில் 30 நிமிடங்கள் தாமதமாகும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story