மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு


மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:45 PM GMT (Updated: 24 Jun 2019 7:58 PM GMT)

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் விஜயலட்சுமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் விஜயலட்சுமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது திருமானூர் அருகேயுள்ள சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திருமானூர் அருகேயுள்ள சுள்ளங்குடி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்து விற்று எங்களது வாழ்க்கையை நடத்தி வந்தோம். கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரி நிறுத்தப்பட்டதால், தற்போது எங்களது குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட கூட பணம் இல்லை. மேலும் மாடுகளுக்கும் தீவனம் உள்ளிட்ட பொருட் களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இந்த சூழ்நிலையிலிருந்து எங்களை காக்க சுள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி தொடங்கி எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சமூக ஆர்வலர் சுகுமார் அரியலூர் பஸ் நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரியை தூர்வாரி, பராமரிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தார். இதேபோல் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story