முதியோர் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; பென்சனர் நலச்சங்கம் தீர்மானம்
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் விருதுநகரில் நடந்தது. மாவட்ட செயலாளர் வேணுகோபால், துணைத்தலைவர்கள் ராஜமாணிக்கம், பாலசுப்பிரமணியம், இயற்கை நல சங்க செயலாளர் செல்வராஜன் ஆகியோர் பேசினர்.
விருதுநகர்,
நெல்லையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் முதியோர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் முதியோர் நலத்துறை அமைத்திட வேண்டும், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் உள்ளதைப்போல முதியோர் நலனுக்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ரெயில் பயணத்தில் முதியோரான ஆண், பெண் இரு பாலருக்கும் 50 சதவீத கட்டண சலுகை வேண்டும்,
முதியோர் உதவித்தொகையை ரூ.1.000–ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், அரசு பஸ்களில் ஆதார் அட்டை உள்ள முதியோர்களுக்கு 40 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும், மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில்
மாவட்ட துணைச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.