கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 5:32 PM GMT)

கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு மந்தியூர், தெற்கு கடையம், கீழக்கடையம், வீராசமுத்திரம் ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நேற்று கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேலிடம் மனு கொடுத்தனர். அவர்களிடம், இன்னும் 10 நாட்களில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலை கொடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

முற்றுகை போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க கடையம் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், துணை தலைவர் கிறிஸ்டோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story