மண்டபம் அருகே படகை திருடி தப்பிச்சென்றவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டனர்


மண்டபம் அருகே படகை திருடி தப்பிச்சென்றவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 26 Jun 2019 10:30 PM GMT (Updated: 26 Jun 2019 9:43 PM GMT)

மண்டபம் அருகே படகை திருடி தப்பிச்சென்றவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசக்திக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்று வேதாளை முனைக்காடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த படகு கடலில் பாசி வளர்க்கவும், சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று படகை கடலில் நிறுத்தி வைத்துள்ளனர். பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல சிவசக்தி சென்றபோது படகு மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர் மீனவர்களுடன் சேர்ந்து படகை தேடியுள்ளார். ஆனால் படகு கிடைக்கவில்லை. இதுபற்றி சிவசக்தி மண்டபம் கடலோர போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் அந்த படகை திருடி படகில் கள்ளத்தனமாக ஆட்களை இலங்கைக்கு ஏற்றிச்சென்றதாகவும், நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் படகை சோதனை செய்தபோது அதில் அகதி, 2 படகோட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படகுடன் 3 பேரையும் பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story