தனியார் விடுதியில் தலையில் காயங்களுடன் பெண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தலையில் காயங்களுடன் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்தம். இவருடன் 45 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் கடந்த 25-ந்தேதி இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் அறையை காலி செய்ய வேண்டும். ஆனால் அறையை காலி செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை விடுதி பணியாளர்கள், அருளானந்தம் உள்பட 3 பேர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறையின் கதவு வெளியில் பூட்டப்பட்டு இருந்தது.
தலையில் காயங்களுடன் பெண் பிணம்
இதனால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அந்த பெண்ணுடன் வந்த மற்ற இருவரையும் காணவில்லை. இதுகுறித்து விடுதி பணியாளர்கள், உடனடியாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது விடுதியில் இறந்த கிடந்த பெண்ணின் தலையில் காயங்கள் இருந்தன. ரத்தம் வழிந்த நிலையில் இருந்தது. மேலும் அந்த பெண்ணுடன் வந்த அருளானந்தம் மற்றும் மற்றொரு பெண்ணையும் காணவில்லை. இதையடுத்து போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த அறையில் பதிவான தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் ‘துலிப்’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த அறை மற்றும் விடுதி முழுவதும் சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலை செய்யப்பட்டாரா?
இறந்தவரின் தலையில் ரத்த காயங்கள் இருந்ததால், அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பெண்ணுடன் வந்த மற்ற இருவரும் எங்கே? அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் கொடுத்த முகவரி உண்மையானதுதானா? என்று வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரமேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
வேளாங்கண்ணி விடுதியில் காயங்களுடன் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story