ஓசூர் சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் திடீர் வாகன சோதனை


ஓசூர் சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் திடீர் வாகன சோதனை
x
தினத்தந்தி 28 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஜூஜூவாடி, அந்திவாடி மற்றும் பாகலூர் ரோட்டில் நல்லூர் செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடிகளில் வனத்துறை சார்பில் திடீரென வாகன சோதனை நடந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பேரண்டபள்ளி, சானமாவு மற்றும் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட இடங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, வாகை உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன.

மேலும் யானைகள், புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகளவில் இங்கு உள்ளன. இந்த நிலையில், ஜூஜூவாடி, அந்திவாடி, நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் திடீரென வாகன சோதனை நடத்தினார்கள்.

வனத்துறையினர் விளக்கம்

அப்போது, இந்த சோதனைச்சாவடிகளின் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் கார்கள், சுற்றுலா வேன்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் அங்கிருந்து வந்த வாகனங்களிலும் சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறும் போது, ‘வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுகிறதா? வனவிலங்குகள் கடத்தப்படுகின்றனவா? என்பதை கண்டறியவே, இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது’ என்றார்கள்.

Next Story