குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 35 மின்மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 35 மின்மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் பகுதியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 35 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவிற்கிணங்க நன்னிலம் வட்டாரத்தில் சொரக்குடி, வாழ்க்கை, வடகுடி மற்றும் ஆலங்குடி ஆகிய ஊராட்சிகளில் குழாய்களில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இதில் சொரக்குடி ஊராட்சியில் இருந்து குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 2 மின்மோட்டார்களும், வடகுடி ஊராட்சியில் 7 மின்மோட்டார்களும், வாழ்க்கை ஊராட்சியில் 13 மின்மோட்டார்களும், ஆலங்குடி ஊராட்சியில் 13 மின்மோட்டார்களும் என மொத்தம் 35 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆய்வு பணியில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சிவப்பிரகாசம், பிச்சைமுத்து, வாழ்க்கை, வடகுடி, வீதிவிடங்கன், செருவளுர், அச்சுதமங்கலம், பில்லூர், பனங்குடி, விசலூர், வேலங்குடி, சேங்கனூர், மகாராஜபுரம், திருவாஞ்சியம், அன்னதானபுரம், செம்பியநல்லூர் ஆகிய ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட்டனர்.

Next Story