தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.20¼ கோடியில் 117 குடிமராமத்து பணிகள் கலெக்டர் அண்ணாதுரை தகவல்
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.20¼ கோடியில் 117 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கீழகாவிரி வடிநில வட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளஆதாரத்துறை சார்பில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 117 குடிமராமத்து பணிகள் ரூ.20 கோடியே 31 லட்சத்து 25 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தஞ்சை காவிரி வடிநிலக்கோட்டத்தில் கட்டுமானங்கள் புனரமைத்தல், தூர்வாரும் பணி, மதகு புனரமைக்கும் பணி, மண் திட்டுகளை அகற்றி தூர்வாரும் பணி, வாய்க்கால் கட்டுமானம் பழுதுபார்க்கும் பணி, அடைப்பு பலகை புதுப்பிக்கும் பணி, தடுப்பணைகள் பழுது பார்க்கும் பணி, புதிதாக மதகு கட்டுமான பணி என மொத்தம் 45 பணிகள் ரூ.5 கோடியே 78 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
அக்னியாறு கோட்டம்
மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்டம் (கிழக்கு) கட்டுப்பாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்கள் கரைகள் பலப்படுத்தும், பணி, தூர்வாரும் பணிகள் என மொத்தம் 18 பணிகள் ரூ.2 கோடியே 16 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதே போன்று வெண்ணாறு வடிநிலக்கோட்டத்தின் சார்பில் 15 பணிகள் ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
கல்லணைக்கால்வாய் கோட்டத்தின் சார்பில் 24 பணிகள் ரூ.7 கோடியே 77 லட்சம் செலவிலும், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக்கோட்டத்தில் 11 பணிகள் ரூ.2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் செலவிலும், திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 4 பணிகள் ரூ.31 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிகாரிகள் ஆய்வு
இந்த பணிகள் விவசாயிகளின் பங்களிப்பு 10 சதவீதத்துடனும், அரசின் பங்களிப்பு 90 சதவீதத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை அந்தந்த வாய்க்கால் பாசனத்துக்குட்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மேற்கொள்ள வேண்டும். வேறு பாசனதாரர்கள் சங்கம் இந்த பணிகளை மேற்கொள்ள முடியாது.
மேலும் பணிகள் மேற்கொள்வது குறித்து உதவி பொறியாளர், வேளாண்மைத்துறையினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் விவசாயிகளுக்கு பல்வேறு அனுபவங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் ஆலோசனை செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி சென்று பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும் தங்களுக்கு சந்தேகம் இருப்பின் நேரில் சென்று பார்த்து பணிகளின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர்கள் ஆசைத்தம்பி (காவிரி), திருவேட்டைசெல்வம்(வெண்ணாறு), முருகேசன் (கல்லணைக்கால்வாய்), வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண்மை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story