ஊழலை பற்றி பேச தயாநிதிமாறனுக்கு தகுதி இல்லை எச்.ராஜா பேச்சு
நாடாளுமன்றத்தில் ஊழலை பற்றி பேசுவதற்கு தயாநிதிமாறனுக்கு தகுதி இல்லை என்று எச்.ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு கருத்துரைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் பொய்களை சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிட்டனர்.
தமிழகத்தில் இந்தித் திணிப்பு என்ற ஒரு பிரசாரத்தை தற்போது தி.மு.க.வினர் தொடங்கி உள்ளனர். அன்பழகன் பேரன் நடத்தும் பள்ளிக்கூடம், ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கூடம், துரைமுருகன் மகன் நடத்தும் பள்ளிக்கூடம், ஆற்காடு வீராசாமி மகன் நடத்தும் பள்ளிக்கூடம் இப்படி தி.மு.க.வினர் அனைவரும் நடத்தி வரும் பள்ளிகளில் இந்தியும், சமஸ்கிருதமும் கற்று கொடுக்கப்படுகிறது. அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை புறக்கணிக்காமல், பொதுமக்களின் குழந்தைகள் மட்டும் இந்தி கற்க கூடாது என்று எதிர்க்கின்றனர்.
போராட்டம்
எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி இந்தி திணிப்பு குறித்து ஸ்டாலின் எப்போதும் பேசக் கூடாது. அப்படி பேசினால் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன்பு பா.ஜனதாவினர் மிகப்பெரிய போராட்டம் நடத்துவார்கள். நாடாளுமன்றத்தில் ஊழலை பற்றி தயாநிதிமாறன் பேசுகிறார். ஊழலை பற்றி பேசுவதற்கு இவருக்கு தகுதி இல்லை. பி.எஸ்.என்.எல் முறைகேட்டில் ஈடுபட்டு சிறை சென்று வந்த தயாநிதிமாறன் நாடாளுமன்றத்தில் ஊழலை பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story