தாராவி சீரமைப்பு திட்டம் குறித்து மத்திய மந்திரிகளுடன் முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆலோசனை


தாராவி சீரமைப்பு திட்டம் குறித்து மத்திய மந்திரிகளுடன் முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆலோசனை
x
தினத்தந்தி 1 July 2019 5:31 AM IST (Updated: 1 July 2019 5:31 AM IST)
t-max-icont-min-icon

தாராவி சீரமைப்பு திட்டம் குறித்து மத்திய மந்திரிகளுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினார்.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன் தினம் மராட்டியத்தில் நிறைவேற்றப்பட உள்ள வீட்டு வசதி திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதித்துறை இணை மந்திரி ஹர்தீப்சிங் புரி மற்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் மும்பை மலபார்ஹில்லில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் 2022-ம் ஆண்டுக்குள் மராட்டியத்தில் அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுப்பது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மேலும் மராட்டியத்தில் கிடப்பில் உள்ள வீட்டு வசதி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதேபோல விமானநிலைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் வரும் இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது, தாராவி குடிசை சீரமைப்பு திட்டம், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி யோகேஷ் சாகர், மேலும் சில மாநில மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக மாநில அரசு ரெயில்வே நிலத்தை வாங்கி உள்ளது. அது குறித்து முதல்-மந்திரி, ரெயில்வே மந்திரியுடன் பேசியதாக கூறப்படுகிறது.

Next Story