வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம்- நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம்- நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம்- நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடவாசல் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது54). விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் அன்று மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பணம்-நகை கொள்ளை

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.2 லட்சம், 2 பவுன் நகை, 2 செல்போன்கள் ஆகியவை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பீரோக்களில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம்-நகை மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Next Story