சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
சி.ஐ.டி.யு. சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாரிக்கண்ணு, பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் குமார் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். கட்டுமானம், ஆட்டோ, சுமைப்பணி உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய உதவிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும், நலவாரிய அட்டை பதிவு புதுப்பித்தலில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்தும், 15 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை தொழிற்சங்கங்களை கலந்துகொள்ளாமலும், கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடத்தாமலும் மாற்றியதை கண்டித்தும், நலவாரிய பிரச்சினை தொடர்பாக பேச சென்ற தொழிற்சங்க தலைவர்களை அவமரியாதையாக பேசிய புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வாளர் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story