போதைப்பொருள் கடத்திய பெண், வெளிநாட்டுக்காரர் கைது
மும்பை காந்திவிலி மேற்கு மகாவீர் நகரில் உள்ள சாலை வழியாக காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காந்திவிலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மும்பை,
போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் காருக்குள் கோகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் காரில் இருந்த பெண் மற்றும் வெளிநாட்டுக்காரரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அந்த பெண் ஜோகேஷ்வரியை சேர்ந்த ஆலியா ஷேக் (வயது 29) என்பதும், அந்த வெளிநாட்டுக்காரர் நைஜீரிய நாட்டை சேர்ந்த அன்டி மதின்யிதோஜி (45) என்பதும் தெரியவந்தது. இதில் போதைப்பொருளை இருவரும் மும்பையில் உள்ள ‘பப்’களில் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story