ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி முகத்தில் சாம்பல் பூசியபடி அதிகாரியிடம் விவசாயிகள் மனு


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி முகத்தில் சாம்பல் பூசியபடி அதிகாரியிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி முகத்தில் சாம்பல் பூசியபடி அதிகாரியிடம் விவசாயிகள் மனு.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் தாலுகாவை சுற்றியுள்ள 7 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. மற்றும் தனியார் நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க தொடங்கினர். அப்போது பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன் வைத்து, அந்த பணியினை தடுத்து நிறுத்தினர். தற்போது அந்த நிறுவனங்கள் அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை அனுமதித்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மாநில அரசு இப்பிரச்சினைகளை முன்னெடுத்து மேற்கண்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் தடுப்பது கடமையாகும். இதற்காக விவசாயிகள் தங்களது கோரிக்கை கொண்ட மனு முதல்- அமைச்சருக்கு சென்று சேரும் வகையில் ஆண்டிமடத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மணலை கையில் ஏந்தியும், விவசாயம் அழிந்து சாம்பலாகும் என்பதை உணர்த்தும் வகையில் முகத்தில் சாம்பல் பூசிக் கொண்டும் கோரிக்கை மனுவை ஆண்டிமடம் துணை தாசில்தார் வேலுமணியிடம் வழங்கினர்.

Next Story