வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஆலங்குடி வட்டக்கிளை சார்பில் ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஆலங்குடி வட்டக்கிளை சார்பில் ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கருப்பையா, தனி வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பி.எம். கிஸான் பணிக்கு போதிய கால அவகாசமும், தேவையான நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களை வெளி முகமை மூலம் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story