ரெயில்வேயை தனியார் மயமாக்க எதிர்ப்பு: கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர்
ரெயில்வேயை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விளக்க அட்டை அணிந்து பணியாற்றினர்.
திருச்சி,
பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், 55 வயது நிரம்பிய ரெயில்வே ஊழியர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கைவிட வேண்டும், ரெயில்வேயை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் கருப்பு பட்டை, கோரிக்கை விளக்க அட்டை அணிந்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கோரிக்கை விளக்க அட்டை அணிந்து பணியாற்றினர்.
ஜங்ஷனில் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பணிக்கு வந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் பலர் கோரிக்கை அட்டையை அணிந்திருந்தனர். அந்த அட்டையில் கோரிக்கைகள் விவரங்கள் அடங்கியிருந்தது. கோட்ட அலுவலக தொழிற்சங்க கிளை சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் அந்தந்த அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் செயலாளர் சோமசுந்தரம் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் தலைவர் மனோகரன், பொருளாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல பொன்மலை ரெயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் கோரிக்கை விளக்க அட்டை அணிந்து பணியாற்றினர்.
தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற உள்ளனர்.

Related Tags :
Next Story