நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட கார், வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது
சீர்காழியில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட கார், வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு கார், வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி சங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கார், வேன் டிரைவர்களுக்கு உரிய வாடகை தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சங்க நிர்வாகிகள் கிருபானந்தம், போஸ், ரமேஷ், நேதாஜி, கண்ணன், மணிவேல் உள்ளிட்டோர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தாசில்தார் சபிதாதேவி உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் சக்திவேல், போராட்டக்காரர்களிடம் தேர்தல் பணியில் ஈடுபட்ட கார், வேன் டிரைவர்களுக்கு உரிய வாடகை தொகையை நாளை (இன்று) வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story