சபாநாயகருடன் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு - அடுத்தடுத்த நிகழ்வுகளால் கர்நாடக அரசியலில் பரபரப்பு
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரை காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 2 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் ரமேஷ் ஜார்கிகோளியின் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
ஆனந்த்சிங்கின் ராஜினாமா கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, சுகாதாரத்துறை மந்திரி சிவானந்த பட்டீல் ஆகியோர் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், ஆனந்த்சிங்கின் ராஜினாமாவை அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற 12-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. சட்டசபை விவகாரத்துறை என்னிடம் இருப்பதால், அதுபற்றி விவாதிக்க சபாநாயகரை சந்தித்து பேசினேன். ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். அவர் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அவர் இதுவரை கட்சிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பவில்லை. அவருக்கு எதிராக நாங்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கவில்லை. நாங்கள் அவரது ராஜினாமா குறித்து விவரங்களை பெற்றுள்ளோம். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
அதைத்தொடர்ந்து சபா நாயகர் ரமேஷ்குமாரை பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி தலைமையில் அக்கட்சி குழுவினர் சந்தித்து பேசினர். அவர்கள் என்ன பேசினர் என்பதை பா.ஜனதா தலைவர்கள் கூற மறுத்துவிட்டனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்புகளை தொடர்ந்து சபாநாயகர், தனது அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ்குமார், “வேலை இல்லாதவர்கள் தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவில் எனது பெயர் இடம் பெற்றிருந்தது. அதுகுறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிப்பதாக அரசு கூறியது. இதுவரை அந்த விசாரணை குழு அமைக்கப்படவில்லை. முதல்-மந்திரி அமெரிக்காவில் உள்ளார். அவர் பெங்களூரு திரும்பியதும் இதுபற்றி அவரிடம் பேசுவேன். எனது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டும் அடுத்த முடிவை நான் எடுப்பேன்“ என்றார்.

Related Tags :
Next Story