கரைமேடு கிராம மக்கள் கால்நடைகளுடன் நூதன போராட்டம்


கரைமேடு கிராம மக்கள் கால்நடைகளுடன் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 7:32 PM GMT)

தமிழக விவசாயிகளை காக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராம மக்கள் கால்நடைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராம மக்கள் காவிரிப்பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதனை சட்டவடிவமாக்கி தமிழக விவசாயிகளை காக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராம மக்கள் கால்நடைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் சாவதை தவிர வேறு வழியில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் உடலிலும், முகத்திலும் சாம்பலைப் பூசிக் கொண்டும், ஒரு இலையில் மண்ணையும், ஒரு இலையில் சோற்றையும் வைத்தனர். மேலும் விறகடுப்பை வைத்தும், காய்கறிகளை இலையில் வைத்தும், நல்ல காற்று வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக மூச்சுக்காற்றை பலூனில் அடைத்து வைத்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கிணறுகள் தரும் ஊற்று நீருக்கு வேட்டு வைத்தது போலாகி விடும் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story