மாவட்ட செய்திகள்

குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + "||" + Action Check in Bathing Area Stores: Confiscation of banned plastic products

குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ்நிலையம் சுற்றியுள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?, தரமான உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறதா?, காலவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவைகள் குறித்து கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ப பிளாஸ்டிக் பொருட்கள், தரமற்ற மற்றும் மூடப்பட்டு விற்கப்படாத இனிப்பு வகைகள் உள்ளிட்ட உண்ணும் பொருட்கள், காலவதியான குளிர்பானங்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், உண்ணும் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் வோவன் பேக் எனப்படும் ஒருவகையான பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த திடீர் ஆய்வில் 20 கடைக்காரர்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சசிதீபா, குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கார்த்திகேயன், கரூர் நகர் நலஅலுவலர் டாக்டர் ஸ்ரீபிரியா, குளித்தலை வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன், குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் உள்பட பலர் உடனிருந்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது பல கடைகளில் இருந்து நான்வோவன் பேக் என்ற ஒருவகையான பையை பயன்படுத்தக்கூடாதெனக்கூறி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது அங்கிருந்த குளித்தலை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்த்குமார் மற்றும் பொதுமக்கள் சிலர் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டபிறகு குளித்தலை பகுதியில் உள்ள பெறும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கேரிபைக்கு பதிலாக இந்த நான்வோவன் பேக் வகையான பையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பையும் தடைசெய்யப்பட்ட பைதான் என்பது குறித்து எந்த அறிவிப்போ, முறையான விழிப்புணர்வோ தற்போதுவரை ஏற்படுத்தவில்லை.

இந்தநிலையில் இந்த வகை பைகளையும் பறிமுதல் செய்தால் கடைக்காரர்கள் என்ன செய்வதன்று மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாசிடம் கேள்வி எழுப்பினார்கள். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற பைகளை பயன்படுத்தக்கூடாதென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக சூர்யபிரகாஷ் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் பறிமுதல்
பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்க- வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சம் வெள்ளி கொலுசுகள், மெட்டிகள் பறிமுதல்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான கொலுசுகள், மெட்டிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. மார்த்தாண்டம் கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மார்த்தாண்டம் கடைகளில் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் அழித்தனர்.
5. திருச்சி விமான நிலையத்தில் ரூ.17¼ லட்சம் கடத்தல் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.17¼ லட்சம் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்தவர் உள்பட 8 பேரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...