மாவட்ட செய்திகள்

துறையூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை + "||" + Villagers blockade the Panchayat office near drinking water

துறையூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

துறையூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
துறையூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
துறையூர்,

போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதேபோல துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தை சேர்ந்த சித்திரை நகர் பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.


கடந்த 6 மாதமாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக் குடங்களுடன் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,557 வழக்குகளுக்கு தீர்வு ரூ.11¼ கோடி இழப்பீடாக பெற்று தரப்பட்டது
திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,557 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, இதன் மூலம் ரூ.11 கோடியே 32 லட்சம் இழப்பீடாக பெற்று தரப்பட்டது.
2. பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடிக்கு தீர்வு
பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
3. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
செல்லியம்மாபாளையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, அந்தப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் கோட்டூர் அருகே நடந்தது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோட்டூர் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி
நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக நடப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.