மாவட்ட செய்திகள்

கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைப்பு போலீசார் விசாரணை + "||" + Government of Tamil Nadu on the Kerala border Police are investigating the reception entrance stupa breaking

கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைப்பு போலீசார் விசாரணை

கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைப்பு போலீசார் விசாரணை
களியக்காவிளையில் அருகே கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைத்து சேதப்படுத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை,

தமிழகத்தின் தென் பகுதி எல்லையில் களியக்காவிளை உள்ளது. களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லை பகுதியில் சோதனைச்சாவடியும், தமிழக அரசு சார்பில் அரசின் சின்னத்துடன் நுழைவு ஸ்தூபியும் வரவேற்பு பலகையும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரள பகுதி தொடங்கும் இடத்தில் கேரள அரசு சார்பில் நுழைவு ஸ்தூபியும், வரவேற்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் நேற்று காலை களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் எல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைந்து சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சமூக விரோதிகளா?

இதற்கிடையே தமிழக அரசின் வரவேற்பு ஸ்தூபி சேதம் அடைந்து கிடப்பதை சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.

இதனால், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக விரோதிகளின் செயலாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கேமரா காட்சி

அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவில் களியக்காவிளையில் இருந்து கேரளா நோக்கி சிமெண்டு கலவை ஏற்றிச் சென்ற லாரியை டிரைவர் திருப்ப முயன்றபோது தமிழக அரசின் ஸ்தூபி மீது மோதி சேதமடையும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த காட்சியை கைப்பற்றி ஸ்தூபியை சேதப்படுத்திய லாரி யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சேதமடைந்த தமிழக அரசின் ஸ்தூபியை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கைதான 5 பேர் குறித்து விசாரணை நடத்த மதுரை, ராமநாதபுரத்துக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்; கலெக்டர்–போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கைதான அன்சாருல்லா இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் குறித்து மதுரையிலும், ராமநாதபுரம் மாவட்டத்திலும் விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நேற்று கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்.
2. கீழ்வேளூர் அருகே, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கீழ்வேளூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திருச்சிற்றம்பலம் அருகே தலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
திருச்சிற்றம்பலம் அருகே தலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 5 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 5 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. பாபநாசம் காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
பாபநாசம் காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு போலீஸ் காரர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.