மாவட்ட செய்திகள்

பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Condemning the BJP Congressmen protested

பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வை கண்டித்து பெரம்பலூர்- அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,

கர்நாடகம் மற்றும் கோவாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி குதிரை பேரத்தின் மூலம், அந்த மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ.க. கலைக்க முயலுவதாகவும், இதனால் பா.ஜ.க.வை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமதுமீரான், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை ராஜூவ்காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி வரவேற்றார். முடிவில் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில்பிரசாத் நன்றி கூறினார்.

இதேபோல் பா.ஜ.க.வை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் நகர தலைவர் சந்திரசேகர், செய்தி தொடர்பாளர் சிவக்குமார், மாரியம்மாள், ஜெயச்சந்திரன், சின்னபொன்னு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. பணி நிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் அங்கன்வாடியில் 3 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் கோட்டூர் அருகே நடந்தது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோட்டூர் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...