தர்மபுரி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் நாளை சுற்றுப்பயணம்


தர்மபுரி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் நாளை சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 7:15 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் நாளை (திங்கட்கிழமை) சுற்றுப் பயணம் செய்கிறார். இதையொட்டி அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தர்மபுரி, 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 9 மணிக்கு மொரப்பூர்-அரூர் ரோட்டில் உள்ள செந்தூர் மஹாலில் நடைபெறும் கடத்தூர் ஒன்றிய செயலாளர் ஜி.எஸ்.குப்புசாமி-லலிதா ஆகியோரது இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் தலைமை தாங்குகிறார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஆர்.ஆர்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அ.ம.மு.க. தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story