மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு + "||" + People's Court in Krishnagiri District: 2,434 cases resolved to Rs 13.58 crore

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 434 வழக்குகளில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 35 ஆயிரத்து 456-க்கு தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி,

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மீனாசதீஷ் தலைமை தாங்கினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 அமர்வுகளில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மொத்தம் 6 ஆயிரத்து 91 வழக்குகள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 2 ஆயிரத்து 434 வழக்குகளில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 35 ஆயிரத்து 456-க்கு தீர்வு காணப்பட்டன. தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான ஆணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
2. தெலுங்கானாவில் இருந்து 2,560 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லை வந்தது
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,560 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது. பின்னர் அரிசி மூட்டைகள் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தானிய கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன.
3. 2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்
2,100 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார்.
4. வாலாஜா ஒன்றியத்தில் மழைக்குறைவை தடுக்க 27 ஏக்கரில் 2,800 மரக்கன்றுகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழைக்குறைவை தடுக்கவும் வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் 27 ஏக்கரில் 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
5. 2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் வழங்கினார்.