மாவட்ட செய்திகள்

பா.ஜ.க.வை கண்டித்து, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Condemning the BJP Erode Congressmen Demonstration

பா.ஜ.க.வை கண்டித்து, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வை கண்டித்து, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,

கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க.வை கண்டித்து தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ஜாபர்சாதிக், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கும் பா.ஜ.க.வை கண்டிப்பது, சர்வாதிகார போக்கை கைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் கட்சியின் மகளிர் அணி மாநில துணைத்தலைவர் சித்ரா விஸ்வநாதன், மாவட்ட தலைவர் புவனேஸ்வரி, கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அர்சத் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப்பாளையம் பூந்துறை ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் வட்டார தலைவர்கள் முத்துகுமார், கோபாலகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தளபதி ரமேஷ், விஜய், பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
2. செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில், 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
3. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது
கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
4. கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் - மினிவேன் டிரைவர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1¾ டன் குட்காவை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...