மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை + "||" + Courtesy of Udayanidhi Stalin at Karunanidhi's Mother Memorial, Kadur, near Thiruvarur

திருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார்.
திருவாரூர்,

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். அவருக்கு தி.மு.க.வினர், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு அவர் திருவாரூரில் தங்கினார்.


அதனை தொடர்ந்து நேற்று காலை திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு அஞ்சுத்தம்மாள் நினைவிடத்திலும், கருணாநிதி உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது தாயார் துர்கா ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கும், முரசொலிமாறன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீட்டின் வெளியில் அமைக்கப்பட்டிருந்த கொடிமேடையில் கொடியேற்றினார். கலை ஞரின் வாழ்க்கை வரலாறு குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். அங்குள்ள வருகைப்பதிவேட்டில், ‘கழகத்தின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லம் வந்துள்ளது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்’ என்று எழுதி கையெழுத்திட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2. தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. 73வது சுதந்திர தினம்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
இந்தியாவில் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊட்டியில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
4. ‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு’ இல.கணேசன் கருத்து
‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு’ என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
5. 4-ம் ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை