மாவட்ட செய்திகள்

நாகை புத்தூரில் லோடு ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதம் கயிற்றால் கேட்டை கட்டி போக்குவரத்தை தடை செய்த ஊழியர் + "||" + Load auto collision at Nagai Buddhoor Railway Gate damage

நாகை புத்தூரில் லோடு ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதம் கயிற்றால் கேட்டை கட்டி போக்குவரத்தை தடை செய்த ஊழியர்

நாகை புத்தூரில் லோடு ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதம் கயிற்றால் கேட்டை கட்டி போக்குவரத்தை தடை செய்த ஊழியர்
நாகை புத்தூரில் லோடு ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதமடைந்தது. இதனால் கயிற்றால் கேட்டை கட்டி சாலை போக்குவரத்தை கேட்கீப்பர் தடை செய்தார்.
நாகப்பட்டினம்,

நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் ரவுண்டானா அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் ரெயில்கள் செல்லும் போது ரெயில்வே கேட் மூடப்படும். நேற்று அதிகாலை திருச்சியில் இருந்து நாகை வழியாக காரைக்காலுக்கு சரக்கு ரெயில் சென்றது. ரெயில் வருவதற்கான சிக்னல் கிடைத்தவுடன் புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள ரெயில்வே கேட்டை மூட கேட் கீப்பர் முயற்சி செய்தார். அப்போது ரெயில்வே கேட் மேலிருந்து கீழ்நோக்கி இறங்கியது. அந்த நேரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி வேகமாக வந்த லோடு ஆட்டோ, ரெயில்வே கேட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.


இதனால் ரெயில்வே கேட் வளைந்து கீழே இறங்காமல் பாதியிலேயே நின்றது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கேட்கீப்பர் தனது அறையில் இருந்து வேகமாக ஓடி வந்து பாதியில் அந்தரத்தில் நின்ற ரெயில்வேகேட்டை தனது கைகளால் பிடித்து கீழே இறக்கி கயிற்றால் கேட் இணையும் பகுதியில் கட்டினார். பின்னர் சரக்கு ரெயில் அங்கிருந்து சென்றதும் இது குறித்து திருச்சி ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் வந்து ரெயில்வே கேட்டை சீரமைக்கும் வரை கேட்கீப்பர் ரெயில் வரும் நேரங்களில் சேதம் அடைந்த ரெயில்வே கேட்டை பிடித்து இழுத்து கயிற்றால் கட்டி வைத்து வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாகை ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே கேட்டில் மோதிவிட்டு சென்ற லோடு ஆட்டோ குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 25 ஆண்டுகளுக்கு பிறகு காவல்கிணறில் 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே உத்தரவு
25 ஆண்டுகளுக்கு பிறகு காவல் கிணறு ரெயில் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும்.
2. கொள்ளிடத்தில், தண்டவாளத்தை கடந்த சரக்கு ஆட்டோ, ரெயில்வே கேட்டை உடைத்தது
கொள்ளிடத்தில், தண்டவாளத்தை கடந்த சரக்கு ஆட்டோ, ரெயில்வே கேட்டை உடைத்தது.
3. திருப்பூரில், ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி படுகாயம்; மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
திருப்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பனியன் தொழிலாளி நிலை தடுமாறி 50 அடிபள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
4. ரெயில்களில் அக்டோபர் 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ரெயில்களில் அக்டோபர் 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
5. ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமா? மத்திய அரசு விளக்கம்
ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...