மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு முகாம் செந்துறையில் நாளை நடக்கிறது


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு முகாம் செந்துறையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 14 July 2019 10:15 PM GMT (Updated: 14 July 2019 6:33 PM GMT)

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) செந்துறையில் நடக்கிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு மாதமாக ஜூலை மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வட்டார அளவில் வங்கி கடன் இணைப்பு, தரமதிப்பீட்டு முகாம்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) செந்துறையில் உள்ள இ-சேவை மையத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் நடைபெறவுள்ளது. இதேபோல் வருகிற 19-ந் தேதி ஜெயங்கொண்டம் இ-சேவை மைய கட்டிடம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், 23-ந் தேதி தா.பழூர் இ-சேவை மையத்திலும், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், 24-ந் தேதி திருமானூர் இ-சேவை மையத்திலும், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்களான வங்கி கடன் இணைப்பு முகாம் நடக்கிறது. சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பிற்கான தகுதிகள் விவரம் வருமாறு:-

கடந்த மாதம் வரை

வாராந்திர மற்றும் மாதாந்திர கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். வாராந்திர அல்லது மாதாந்திர சேமிப்பு இருக்க வேண்டும். உள்கடன் மற்றும் வங்கி கடன் தவணை தவறாமல் திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து பதிவேடுகளும் முறையாக கடந்த மாதம் வரை எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே தொடர்புடைய வட்டாரத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள், தரமதிப்பீட்டிற்கான தகுதிகளை கொண்டிருந்தால் சுய உதவிக்குழு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களுடன் தரமதிப்பீடு மற்றும் வங்கிகடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story