மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்: கல்லூரி மாணவர் சாவு போலீசார் விசாரணை + "||" + Bus collision on motorcycle: Police investigate death of college student

மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்: கல்லூரி மாணவர் சாவு போலீசார் விசாரணை

மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்: கல்லூரி மாணவர் சாவு போலீசார் விசாரணை
கீழ்வேளூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்,

கீழ்வேளூரை அடுத்த சிக்கல் ஊராட்சி பனைமேடு தெற்கு வெளி பகுதியை சேர்ந்தவர் யேசுராஜ். இவரது மகன் ரோஸ்லின் ஆல்பர்ட் (வயது18). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு ரோஸ்லின் ஆல்பர்ட் மோட்டார் சைக்கிளில் பனைமேட்டில் இருந்து சிக்கலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகையில் இருந்து வடுகச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் பலத்த காயமடைந்த ரோஸ்லின் ஆல்பர்ட்டை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.