வெவ்வேறு இடங்களில் கர்ப்பிணி, பாலிடெக்னிக் மாணவி தற்கொலை


வெவ்வேறு இடங்களில் கர்ப்பிணி, பாலிடெக்னிக் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 15 July 2019 10:00 PM GMT (Updated: 15 July 2019 5:57 PM GMT)

வெவ்வேறு இடங்களில் கர்ப்பிணி, பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார். பட்டதாரி. இவருடைய மனைவி பாஞ்சாலி(வயது21). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பாஞ்சாலி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சதீஸ்குமார் படித்து விட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். நிரந்தரமாக வேலை இல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மதியம் வெளியில் சென்று விட்டு சதீஸ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாஞ்சாலி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு ஆண்டில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டது தொடர்பாக அரூர் உதவி கலெக்டர் புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் பவித்ரா (வயது 19). இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவரது தந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டார். அன்று முதல் மன வருத்தத்தில் காணப்பட்ட பவித்ரா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தாய் செல்வி கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story