திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் அகலமான ரவுண்டானாவால் வாகன ஓட்டிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அகலமான ரவுண்டானாவால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆவடி,
திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக நத்தமேடு, நடுகுத்தகை, பாக்கம், மேலகொண்டயார், தாமரைப்பாக்கம், புலியூர், வெங்கல், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்றாடம் லாரி, கார், பஸ், ஆட்டோ என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
அதேபோல் இங்குள்ள ரவுண்டானாவை கடந்து திருநின்றவூர், ஆவடி, பட்டாபிராம் மற்றும் மேம்பாலத்தை கடந்து ராமதாசபுரம், கொட்டாமேடு, கொசவன்பாளையம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த மேம்பாலத்தை கடந்து திருநின்றவூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவிலுக்கு பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு மேம்பாலம் கட்டும் பொழுது ராமதாசபுரத்தில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் காந்தி சிலை அருகே இந்த மேம்பாலம் முடிவடைகிறது. மேம்பாலம் முடிவடைந்த அந்த பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தள்ளி ஒரு உயர்கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த கம்பத்தை சுற்றிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை குறுக்கி ரவுண்டானாவை அதிகமான அளவில் கட்டியுள்ளனர். இதனால் ரவுண்டானாவில் இருபுறமும் சாலைகள் குறுகி காணப்படுகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அன்றாடம் அதிகமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி விபத்துக்களுக்கு உள்ளாகின்றனறன.
அதேபோல் மேம்பாலத்தில் இருந்து வருகிறவர்களும், மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் சாலையில் வருகிறவர்களும் ரவுண்டானாவுக்கு முன்பாகவே ஆவடி, பட்டாபிராம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே நேரத்தில் திரும்புவதால் விபத்து ஏற்படுகின்றது.
மேலும் ரவுண்டானாவை சுற்றி காலியான இடத்தில் ஆட்டோக்கள், தனியார் வாகனங்களை நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
எனவே திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் மேம்பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான ரவுண்டானாவை அப்புறப்படுத்த வேண்டும், அல்லது குறுகிய அளவில் ரவுண்டானா ஒன்றை அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், அதேபோல் மேம்பாலம் இருக்கின்ற இடத்திலிருந்து ரவுண்டானா வரை சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story